தர்மபுரி டிச, 26
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் நபார்டு வங்கியின் 2023-24 ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் தீபனாவிஸ்வேஸ்வரி, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் பத்மாவதி, பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் கார்த்திகைவாசன், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் கண்ணன், நபார்டு வங்கி மேலாளர் பிரவீன் பாபு, வங்கிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசுதுறை அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.