தர்மபுரி டிச, 24
தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் நேற்று முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சாந்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் 100 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள நிலையில் அதில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் சேர்ந்த 6 அரசு பள்ளி மாணவர்ளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. மற்ற மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அமுத வள்ளி உள்ளிட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது.