நெல்லை டிச, 21
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு ஊர்களில் உள்ள 110 கோவில்களில் சைவம் ஆர்க் அமைப்பின் சார்பில் மார்கழி மாத பஜனை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் 10-ம் ஆண்டு நிறைவு விழாவும், 11-ம் ஆண்டு தொடக்க விழாவும் களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் நடந்தது.
இவ்விழாவில் சைவம் ஆர்க் நிறுவன தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். சிதம்பரம் திட்சிதர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
பஜனை ஒருங்கிணைப்பா ளர் முருகன் வரவேற்றார். சைவம் ஆர்க் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வீரபத்திரன் விழாவின் நோக்கம் குறித்து பேசினார்.
அதனைதொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செங்கோல் ஆதீனம் கயிலை குருமணி 103-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமிகள் 10 ஆண்டுகளாக சிறந்த முறையில் பஜனைகள் நடத்திய பஜனை குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி ஆசி வழங்கினார்.
களக்காடு ஆனந்த நடராஜர் திருவாசக குழுவின் தலைவர் சிவரவிக்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழாவில் நெல்லை, கன்னியாகுமரி தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். பஜனை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமரன் நன்றி கூறினார்.
முன்னதாக செங்கோல் ஆதீனத்திற்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆதீனம் சத்தியவாகீஸ்வரர் சன்னதி, கோமதி அம்பாள் சன்னதி, முருகப்பெருமான் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் களக்காடு அய்யப்பன் கோவிலுக்கு சென்ற ஆதீனம் அங்கும் சுவாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.