Spread the love

நெல்லை டிச, 21

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே கட்டப்புளி பகுதியில் ஐயப்பன்- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கணவர் ஐயப்பன் தீவிரமான அஜித் ரசிகராக இருந்து வருகிறார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் தான் அஜித் ரசிகர் மன்ற தலைவர் என்றும் அஜித்தின் மேலாளர் தனக்கு நெருக்கமானவர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் அஜித் கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு மாவட்டம் வாரியாக கணக்கெடுத்து 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது கணவரை ஏமாற்றியதாக அவரது மனைவி ராஜேஸ்வரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் வீடு கட்டி தருவதற்கு பத்திரப்பதிவுக்கான தொகை ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என்றும் அதன் பின்பு வீடு கட்டுவதற்கான தொகை 15 லட்சமும் பத்திரப்பதிவிற்கான தொகையும் சேர்த்து உங்களின் வங்கி கணக்குக்கு வந்துவிடும் என்று கூறி சிவா என்பவர் ஏமாற்றி உள்ளதாக ராஜேஸ்வரி தெரிவித்தார்.

மேலும் அவரை உறுதிபட நம்ப வைப்பதற்கும் அவரிடம் இருந்து பணத்தை பெறுவதற்கும் நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அலுவலகத்தில் பணிபுரியும் சங்கர் என்பவரை போலியாக தயார் செய்து ஐயப்பனிடம் பேசி அவர் பணிபுரியும் இடத்திற்கு சென்று இருபது ரூபாய் போலி பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *