நெல்லை டிச, 19
நெல்லை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஏராளமானோர் உள் நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். மேலும் அங்கு பன்னோக்கு மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களை ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு அழைத்து செல்லவும், தூய்மை பணியில் ஈடுபடவும் ஒப்பந்த அடிப்படையில் 95 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு மாதம் ரூ. 8 ஆயிரத்து 500 ஊதியம் வழங்ப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதமாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பன்னோக்கு மருத்துவமனை முன்பு தூய்மை பணியாளர்கள் இன்று காலை திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கையில் தட்டு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ஐகிரவுண்டு காவல் ஆய்வாளர் அரிகரன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை மாவட்டம்.