Spread the love

திருவள்ளூர் டிச, 17

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி முடியும் நிலையில் உள்ளது. விரைவில் திறக்கபட இருக்கிறது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதேபோல் பூந்தமல்லி அடுத்த திருமழிசை துணைக் கோள் நகரம் அருகேயும் புதிய பேருந்து நிலையம் 25 ஏக்கரில் ரூ. 336 கோடி மதிப்பில் கடந்த 2021-ம் ஆண்டுமுதல் கட்டப்பட்டு வருகிறது. கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கத்தை தொடர்ந்து 4-வது புதிய பேருந்து நிலையமாக திருமழிசை பஸ்நிலையம் அமைய உள்ளது. பஸ்நிலைய கட்டுமானபணி 80 சதவீதம் முடிந்து உள்ளது.

இந்த புதிய பேருந்து நிலையத்தில், மேற்கு மண்டலங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து கழகம், கர்நாடக மாநில போக்குவரத்து கழகம் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கட்டுமான பணியை அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும் இந்த ஆய்வின் போது பூந்தமல்லி சட்ட மன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளரச்சித்துறை முதன்மை செயலர்அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல்மிஸ்ரா, பூந்தமல்லி சட்ட மன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *