Spread the love

கன்னியாகுமரி டிச, 17

சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு அதிகளவில் வருகிறார்கள். இதனால், கன்னியாகுமரியில் கடற்கரை பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன.

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தங்கசிவம், பிரவீன் ரகு, சங்கர் நாராயணன், வின்சென்ட் கிளாட்சன், ரவி ஆகியோர் நேற்று கன்னியாகுமரி மற்றும் கொட்டாரம் பகுதியில் 64 கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது 12 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. கடைகளில் இருந்து 18 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு கடைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 12 கடைகளுக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்ய பொருட்கள் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த கூடாது எச்சரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *