காஞ்சிபுரம் டிச, 17
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் காஞ்சிசிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 23 ம்தேதி புத்தகத் திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த புத்தக திருவிழா 100 அரங்குகளுடன் அடுத்த மாதம்(ஜனவரி)-2 ம்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட நூலக அலுவலர் மந்திரம், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.