செங்கல்பட்டு டிச, 16
மாமல்லபுரம் பகுதியில் மழை, கடல் சீற்றம், “மாண்டஸ்” புயல் என கடந்த 7 நாட்களாக கடலின் அலை மேலோட்டமாகவும், ஆழ்கடல் அழுத்தமும் இயற்கைக்கு மாறாக இருந்து வந்தது. இந்நிலையில் கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்தது.
இதையடுத்து மாமல்லபுரம், தேவநேரி, நெம்மேலி, வெண்புருஷம், உய்யாலிகுப்பம், புதுப்பட்டினம் பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர். வழக்கம் போல் இவர்கள் 5.கி.மீ., துரம் வரை சென்று மீன் பிடித்தனர். ஆனால் வலையில் இறால், வஞ்சிரம், ஷீலா, பாறை போன்ற விலை உயர்ந்த மீன்கள் ஏதும் சிக்கவில்லை. அப்படி சென்றாலும், டீசல், நேரம், மோட்டார் தேய்மானம் கணக்கிட்டால் ஆதாயம் கிடைக்காது. அதனால் வீட்டுக்கு தேவையான சாதாரண மீன்களை மட்டும் பிடித்து வரும் சூழ்நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.