தர்மபுரி டிச, 15
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதேபோல் 15-வது நிதிக்குழு அடிப்படை மானியம் 2-வது தவணை திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பென்னாகரம் சிறுவர் பூங்காவை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ரங்கநாதன், பேரூராட்சி தலைவர்கள் வீரமணி, பிருந்தா, செயல் அலுவலர் கோமதி, இளநிலை பொறியாளர் பழனி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.