நெல்லை டிச, 15
நெல்லை மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்க்காவல் படையினர் புதிதாக தேர்வு செய்யப்பட்டு 42 ஆண்கள், மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 49 பேருக்கு கடந்த அக்டோபர் 19 ம் தேதி முதல் கவாந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் பற்றிய பயிற்சி நெல்லை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.
ஊர்காவல் படை வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று நடைபெற்றது. ஆயுதப்படை மைதானத்தில் ஊர்காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை நெல்லை மாநகர காவல் ஆணையர் அவினாஷ் குமார் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பயிற்சி முடித்து களப்பணிக்கு செல்லும் ஊர்காவல் படையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனபன போன்ற அறிவுரைகளை வழங்கி கவாந்து பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கும், கவாத்து போதகர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா , உதவி ஆணையர் சரவணன், மாநகர ஆயுதப்படை ஆய்வாளர் டேனியல் கிருபாகரன் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை மாவட்டம்.