தேனி டிச, 10
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற இயக்கம் மகளிர் திட்டம் சார்பாக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றிடும் வகையில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் பயிலும் நிகழ்வாக இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த இளைஞர் திறன் திருவிழாவில் தேனி மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ரூபர் சங்கர் ராஜா பங்கேற்று தேனி ஒன்றிய சேர்மன் சக்கரவர்த்தி முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த முகாமில் தேனி மாவட்டச் சேர்ந்த ஏராளமான படித்த இளைஞர்கள் பங்கு பெற்று தங்களுக்கு தேவையான தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பயிற்சியினை தேர்ந்தெடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலை வாய்ப்பு துறை அலுவலர்கள் பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்த அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் படித்து முடித்த இளைஞர்கள் பங்கேற்றனர்.