புதுக்கோட்டை டிச, 2
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில், சட்டமன்ற அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். இந்த சூழலில், ஆலங்குடி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 48 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர். இந்தப் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் தெரிகின்றன. அவ்வளியே செல்பவரை பார்த்து சத்தமாக குறைத்து துரத்தி வருகின்றன இந்த நாய்கள். இதனால் இப்பகுதியே வருபவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தரவேண்டு என பொதுமக்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.