சென்னை டிச, 1
சென்னையில் பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை நிதிநிலைமை காரணமாக எஞ்சிய ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட நிலுவைத் தொகையை படிப்படியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து துறையின் நிதிநிலைமை மற்றும் தொடரும் டீசல் விலையேற்றம், உள்ள சூழலிலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என கூறினார்.