சென்னை டிச, 2
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மதுரை – அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், இருக்கன்குடி – அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி – அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில், மதுரை – அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், சங்கரன்கோவில் – அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.