துபாய் நவ, 30
தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ் தமிழ்நாட்டில் சத்தமில்லாம 7 வருடங்களுக்கு மேலாக இரத்ததானம் மற்றும் பல்வேறு விதமான மனிதநேய சேவைகள் செய்துவருகிறார்.
சிறு உதவிக்கு விளம்பரம் தேடும் உலகில், இதுவரை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இவர்போன்று மனித நேயமிக்க செயல்களில் ஈடுபடுபவர்களை எமது வணக்கம் பாரதம் வார இதழ் மூலம் மக்களின் பார்வைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இதுபற்றி சமூக சேவகர் விக்னேஷ் கூறுகையில்,
“நான் என் கடமையாக கருதுவது மக்களுக்கு உதவி செய்வதைவிட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை பெரிதாக கருதுகிறேன்!!
மேலும் நான் கடந்த 7 வருடங்களாக தமிழ்நாட்டில் இரத்த தேவைக்கு என்னால் முடிந்த அளவு பங்களிப்பை அளித்து வருகிறேன். தனிப்பட்ட முறையில் நான் 23 முறை இரத்த தானம் அளித்துள்ளேன். என்னால் 1000 க்கும் மேற்ப்பட்டோருக்கு இரத்ததானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக அமீரகத்தில் உள்ளேன். அங்கேயும் என்னால் முடிந்த அளவு இரத்த தான விழிப்புணர்வை ஏற்படுத்தி இரத்ததான முகாம் நடத்தினோம். அமீரகத்திலும் தமிழ்நாட்டின் சார்பில் ஒரு முறை இரத்த தானம் வழங்கினேன், மேலும் தமிழ்நாடு சிறந்த இரத்த ஒருங்கிணைப்பாளர் விருது ; மனித நேய விருது, தமிழன் விருது, சிறந்த இரத்த கொடையாளர் விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளேன்!!!
இரத்த தானம் மட்டுமின்றி, சாலை ஓரங்களில் வாழும் உதவி கிடைக்காமல் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் நண்பர்களுடன் இணைந்து உணவுகள் மற்றும் உடைகள் வழங்கிவருகிறோம். மேலும் மரம் நடுதல், மற்றும் சமூக சேவையை செய்து வருகிறேன் .
இரத்ததான தேவை என்று வரும் நபர்களுக்கு இரத்தம் ஏற்பாடு செய்வது மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்திலும் ஒருவரை இரத்த தானம் கொடுக்க ஊக்குவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
மேலும் பெற்றோர் இல்லாத மாணவ, மாணவிகளுக்கு படிப்பு மற்றும் மருத்துவ உதவிக்கும் என் நண்பர்கள் ஒத்துழைப்புடன் உதவி செய்து வருகிறோம்.
அதுமட்டுமல்லாமல் எனது பெண் (தாய்மார்கள்) நட்புகள் உதவியால் தாய்ப்பால் சேகரிப்பு பைகளை வாங்கி தாய்ப்பால் வங்கிற்கு கொடுத்துள்ளோம். ஒருமுறை செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பெண்(தாய்) 2பேக் தாய்பால் சேகரித்து வைத்திருந்தார். அதை சரியான நேரத்தில் தாய்ப்பால் வங்கிக்கு கொண்டு சேர்த்து உதவினோம்.
கடந்த 6 மாதங்களாக தட்டணுக்களின் PLATELET அவசர நிலையை புரிந்து கொண்டேன்! அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தட்டணுக்கள் PLATELET தேவை அதிக அளவு தேவை இருப்பதால் தட்டணுக்கள்PLATELET ல் மிகுந்த கவனம் செலுத்தி தட்டணு கொடையாளிகளை திரட்டுவது மட்டுமின்றி நம்மில் பாதி நபர்களுக்கு தெரியாத தட்டணுக்களின் முக்கியத்துவத்தை அனைத்து மக்களுக்கும் விளம்பரம் (சமூக வலைத்தளம்) மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். ஒருமாதத்தில் மட்டும் 13 க்கும் மேல் தட்டணு கொடையாளிகளை ஊக்குவித்து தட்டணு தானத்தை பெற்றுள்ளேன் ( பெண்களும் தட்டணு தானம் அளித்தனர்).
உதவ வேண்டும் என்ற மனம் இருந்தால் உலகில் தானம் என்ற வார்த்தைக்கே இடமில்லை என்பதே நிதர்ச்சனம் என்று கூறியுள்ளார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.