தர்மபுரி நவ, 30
தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிகபடியாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பூ மார்க்கெட்டில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் வெளி மாவட்டங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது.
இதனால் அதிகப்படியாக மாலை கட்டுவதற்கு பயன்படுத்தும் சம்பங்கி, சாமந்திப்பூ, விளைச்சலில் மாற்றம் ஏற்பட்டதால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் சம்பங்கி, சாமந்தி பூச்செடிகள் நோய் தொற்று ஏற்பட்டதால் பூக்கள் குன்றி பூத்துள்ளது. இதனால் தினசரி மார்க்கெட்டில் சம்பங்கி கிலோ ரூ.20 ரூபாய்க்கும் சாமந்தி 30 முதல் 50 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற வகை பூக்களான சன்னமல்லி, குண்டுமல்லி, காக்கடா, கலர் காக்கட்டான், கனகாம்பரம், ஜாதிமல்லி, பன்னீர் ரோஸ், உள்ளிட்டவை நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.