தர்மபுரி டிச, 2
புதிய உரிமைகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரி தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்க மாவட்ட தலைவர் கருவூரான் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் மாரிமுத்து, நிர்வாகிகள் கோவிந்தசாமி, செந்தில், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.