வேலூர் நவ, 29
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் காட்பாடி அருகே உள்ள காசிகுட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் செல்போன் டவர் அமைக்க வேண்டாம் என்றும் வீடுகளுக்கு மிக அருகில் இந்த டவர்கள் அமைக்கப்பட உள்ளதால் இடையூறாக இருக்கும் எனக் கூறி செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.