வேலூர் நவ, 27
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், 2-ம் நிலை சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று வேலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் 14 மையங்களில் நடைபெற உள்ளது. அதில் 14,991 பேர் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வு பாதுகாப்பு பணிக்கு 1,200 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வர அனுமதி கிடையாது.பேனா மற்றும் ஹால்டிக்கெட் மட்டுமே கொண்டு வரவேண்டும். தேர்வின் போது பேசவோ, சைகை புரியவோ, பிறரை பார்த்து எழுத கூடாது. மீறினால் அவரது தேர்வுநிலை ரத்து செய்யப்படும். கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த தேர்வு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.