ஈரோடு நவ, 28
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் , பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக தலைவர் – நிர்வாக இயக்குநர் சிவசண்முகராஜா தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, பயிற்சி ஆட்சியர் பொன்மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர்கள் சதீஷ்குமார், திவ்யபிரியதர்ஷினி, வட்டாச்சியர் சிவகாமி மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.