ஈரோடு நவ, 30
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணை யின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மீண்டும் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.