Month: September 2022

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆவணி மாத மகா அபிஷேகம்.

கடலூர் செப், 10 உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மார்கழி, மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்கள் என ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த…

ஆனைமலையிலிருந்து ரூ.5 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி

கோயம்புத்தூர் செப், 10 ஆனைமலையில் இருந்து உடுமலை செல்லும் ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் விபத்துகளை தடுக்க சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.…

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்.

செங்கல்பட்டு செப், 10 மாமல்லபுரத்தில் நேற்று கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக 10 மீட்டர் தூர கரைப்பகுதி வரை ராட்சத அலைகள் சீறி எழும்பி வந்தன. நேற்று ராட்சத அலையால் கடல்நீர் முன்னோக்கி வந்ததால் அங்குள்ள கடற்கரை…

பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை செப்,10 திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த புது அப்பேடு சின்னமலை குன்றின் மீது உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேம் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி அரசு சார்பில் பெங்களூர் மாநாட்டில் அமைச்சர் லட்சுமி நாராயணன்.

பெங்களூர் செப், 10 பெங்களூரில் நடைபெற்று வரும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மூலம் மந்தன் என்ற தேசிய மாநாட்டில் புதுச்சேரி அரசு சார்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்றார். மேலும் அவர் மத்திய சாலை போக்குவரத்து…

பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நிறுத்தம். கோவில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி செப், 10 முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும்…

முத்துக்கருப்பன் நினைவு மாணவர் விடுதி திறப்பு விழா.

தூத்துக்குடி செப், 10 ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சில்லங்குளம் முத்துக்கருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் முத்து கருப்பன் நினைவு மாணவர் விடுதியினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் முன்னிலையில் நேற்று திறந்து வைத்தார்.…

பெரம்பலூர் அருகே லாரி மோதி ஆடுகள் பணி நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

பெரம்பலூர் செப், 10 பெரம்பலூர் மாவட்டம் கலரம்பட்டி மூன்றாவது வார்டுக்குட்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் அரசு பேருந்து ஓட்டுனர். இவரது மனைவி தனலட்சுமி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று கலரம்பட்டி காட்டுப்பகுதியில் எட்டு ஆடுகளை மேய்த்து விட்டு பட்டியில்…

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது

திருவண்ணாமலை செப், 10 திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி செங்கம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் மேற்பார்வையில், மாவட்ட குற்றத்தடுப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் காவலர்கள் இணைந்து செங்கம் நகரத்தில் நடத்திய…

கீழக்கரையில் தேசிய ஊட்டச்சத்து விழா

கீழக்கரை செப், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் திருப்புல்லாணி குழந்தைகள் நல அலுவலர் மற்றும் 15-வது வார்டு உறுப்பினர் டல்சி கலந்துகொண்டு குழந்தைகளுக்கான அறிவுரைகளை வழங்கினார் இந்த…