பெங்களூர் செப், 10
பெங்களூரில் நடைபெற்று வரும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மூலம் மந்தன் என்ற தேசிய மாநாட்டில் புதுச்சேரி அரசு சார்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்றார்.
மேலும் அவர் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரியிடம் புதுச்சேரி வளர்ச்சி தொடர்பான கடலூர் சாலையில் இரண்டு நீண்ட மேம்பாலம் மற்றும் பல்வேறு சாலை கட்டமைப்பு திட்டங்களின் பற்றிய விபரங்களை எடுத்துரைத்து நிதி உதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.