Month: September 2022

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட யூரியா பெட்டிகள்.

ஈரோடு செப், 22 ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களின் பாசன பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் விவசாயத்துக்கு தேவையான உரத்தை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் இருந்து கொள்முதல் செய்து, ஈரோட்டுக்கு கொண்டு வருகிறார்கள்.…

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் கோடிக்கணக்கான வருவாய்

திண்டுக்கல் செப், 22 அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை…

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

தர்மபுரி செப், 22 பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட ஜாலிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமை தாங்கி 141 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு…

காலை உணவு வழங்கும் திட்டம். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கடலூர் செப், 22 முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் கடலூர் மாநகராட்சியில் உள்ள 15 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 630 மாணவர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா மேலும்…

வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றில் பேரிடர் மீட்பு பயிற்சி.

நெல்லை செப், 22 நெல்லை வண்ணார் பேட்டையில் பேரிடர் மீட்பு குழு சார்பில் மாநகர காவல் துறையினருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி நடைபெற்றது. மாநகர துணை காவல் ஆணையர் அனிதா மேற்பார்வையில் வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றில் நடந்த…

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை செப், 22 நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல், விண்ணப்பிக்கலாம் 2022-23-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில்…

நகைச்சுவை நடிகர் போண்டாமணி‌. இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.

சென்னை செப், 22 தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில்…

பறிமுதல் செய்த மதுபானங்கள் அழிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் செப், 22 பொள்ளாச்சி, பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது கள்ள மார்க்கெட், சட்ட விரோதமாக பதுக்கி விற்பனை செய்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் வாகன சோதனையில்…

தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா தொடக்கம்.

நெல்லை செப், 22 நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித கொடி யை கோவில் தர்மகர்த்தா சேவியர் ஜமிலா தலைமையில் பெரியவர்கள் எடுத்து வந்தனர். பின்னர் புனித கொடியை அருட்தந்தை ஜெபநாதன்,…

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு காவல்துறை துணை தலைவர் பாராட்டு.

அரியலூர் செப், 22 திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் சரவணசுந்தர் நேற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில், மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவில்…