Category: மாவட்ட செய்திகள்

கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 7 குத்தாலம் பேரூராட்சியில் உள்ள மளிகை கடைகள், பேக்கரி கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் சுகாதார துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ராஜமாணிக்கம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் ஆகியோர் ஆய்வு மேற்க்கொண்டனர். அப்போது காலாவதியான உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள்,…

புது வர்ணத்தில் ஜொலிக்கும் யானைக்கல் சிலை.

மதுரை ஆகஸ்ட், 7 பழங்காலத்தில் மதுரையின் வெளிவீதியை சுற்றிலும் நான்கு புறமும் பிரமாண்ட கோட்டை சுவரும், கோட்டை நுழைவுவாசலும் இருந்தது. வெள்ளையர்கள் காலத்தில் நான்கு பக்கமும் உள்ள கோட்டைச் சுவர்கள் அகற்றப்பட்டது. சுவரை அகற்ற நடவடிக்கை எடுத்த வெள்ளைக்கார ஆட்சியரான மாரட்…

பேரூராட்சியில் ரூ.58.76 லட்சத்தில் திட்டப்பணிகள்.

பர்கூர் ஆகஸ்ட், 7 கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் ரூ.58.76 லட்சம் மதிப்பில் 15-வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், திடக்கழிவு மேலாண்மை கூடம், கழிவறைகள் சீர்செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பூமி…

தேசிய மக்கள் நீதிமன்றம் 13ம் தேதி நடை பெற உள்ளது.

தர்மபுரி ஆகஸ்ட், 7 தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 13-ம்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈபிஎஸ் நிவாரணம்.

நாமக்கல் ஆகஸ்ட், 7 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தங்கியிருந்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

கருணாநிதி நினைவு தினம் : முதலமைச்சர் தலைமையில் அமைதி பேரணி

சென்னை ஆகஸ்ட், 7 தமிழக முன்னாள் முதலமைச்சர், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதியின் நினைவுதினத்தையொட்டி சென்னையில் திமுக அமைதிப் பேரணி நடைபெறுகிறது.…

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு – கரைகளை பலப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கடலூர் ஆகஸ்ட், 7 மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு…

ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியேறி குளம்போல் தேங்கிய தண்ணீர்.

கீழப்பழுவூர் ஆகஸ்ட், 7 அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள திடீர் குப்பத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி மற்றும் அடிபம்பு அமைக்கப்பட்டு, குடிநீர்…

சாரல் விழாவை முன்னிட்டு குற்றாலத்தில் நாய்கள் கண்காட்சி.

குற்றாலம் ஆகஸ்ட், 7 குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவை முன்னிட்டு கலைவாணர் கலையரங்கில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறை மண்டல துணை இயக்குனர் தியோ பிலஸ் ரோஜர் தலைமை தாங்கினார். இந்தக் கண்காட்சியில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி,…

குழந்தைகள் நல மையத்தை ஆட்சியர் திடீர் ஆய்வு.

சின்னசேலம் ஆகஸ்ட், 7 கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட அம்மையகரம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் நல மையத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வுசெய்தார். அப்போது அங்கு காய்கறி தோட்டம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு கிராமப்புறங்களில் அரசுக்குச் சொந்தமான காலியாகவுள்ள…