சென்னை ஆகஸ்ட், 7
தமிழக முன்னாள் முதலமைச்சர், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதியின் நினைவுதினத்தையொட்டி சென்னையில் திமுக அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
சென்னை ஓமந்தூரார் அருகே தொடங்கும் அமைதி பேரணி மெரீனாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in