நாமக்கல் ஆகஸ்ட், 7
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவிரி கரையோரம் தங்கியிருந்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பவானி மற்றும் குமாரபாளையம் கரையோர பகுதிகளில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காவிரி வெள்ளத்தால் ஈரோடு மாவட்டம், பவானி கரையோர பகுதிகளில் 249 குடும்பத்தைச் சேர்ந்த 856 பேர் வெளியேற்றப்பட்டு பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குமாரபாளையம் பகுதியில் 245 குடும்பத்தைச் சேர்ந்த 649 பேரும், பள்ளிபாளையம் பகுதியில் 295 குடும்பங்களைச் சேர்ந்த 833 பேரும் கரையோர பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு மேடான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 12 நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். கரையோரப் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமோ, அதனை அதிமுக. செய்து வருகிறது. அதிமுக. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி ஆற்றுவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என கூறினார்.
மேலும் குமாரபாளையம் மற்றும் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கலைமகள் வீதி, தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளை சென்று பார்வையிட்டதோடு மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in