Category: மாவட்ட செய்திகள்

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் ஆகஸ்ட் 11 மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தா.பழூர் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஆரோக்கியமேரி தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் பார்வதி, ரேவதி…

செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு, பிரியாணி விருந்து.

மாமல்லபுரம் ஆகஸ்ட், 11 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 12 நாட்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று முடிந்தன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2000 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர். மேலும் போட்டிகளில் பங்கேற்க வந்த வீரர்களின் பாதுகாப்புக்காக…

புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றவர்கள் கைது.

பெரம்பலூர் ஆகஸ்ட், 10 பெரம்பலூரை அடுத்த க.எறையூர் அருகே பெரம்பலூர்-அரியலூர் சாலையில் மருவத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 ஆயிரத்து…

வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை.

கரூர் ஆகஸ்ட், 10 கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கரூர் காமராஜ் நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.…

கொல்லிமலையில் பழங்குடியினர் தினவிழா.

கொல்லிமலை ஆகஸ்ட், 10 நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நேற்று நடந்த உலக பழங்குடியினர் தின விழாவில் 250 நபர்களுக்கு ரூ.2.38 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார். இவ்விழாவுக்கு மாவட்ட…

தபால் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்.

நெல்லை ஆகஸ்ட், 10 தபால் துறையை தனியார் மயமாக்ககூடாது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தபால்துறை ஊழியர்கள் கடந்த 3,4,5-ம் தேதிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.…

மர்ம நபர்கள் ஊடுருவல். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் பரபரப்பு.

நெல்லை ஆகஸ்ட், 10 நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு, புலி, யானை, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டெருமை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை தாவரங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள செங்கல்தேரி வனப்பகுதி…

பாரதியஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம்.

திருப்புவனம் ஆகஸ்ட், 10 திருப்புவனம் கிழக்கு ஒன்றிய பாரதியஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் திருப்புவனத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள்,…

மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை ஆகஸ்ட், 10 சேத்துப்பட்டு எறும்பூர் கிராமத்தில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெரணமல்லூர் ஒன்றியம் எறும்பூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு செய்யாறு துணை மாவட்ட ஆட்சியர் வினோத்குமார் தலைமை தாங்கினார்.…

நிரம்பிய சோலையார் அணை

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 10 வால்பாறையில் உள்ள சோலையார் அணை தொடர் மழை காரணமாக முதல் முறையாக நிரம்பியது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய அணையாகும். இந்த அணை 165 கன அடி கொள்ளவு…