Category: மாவட்ட செய்திகள்

நீர்நிலைகள், கழிவு நீர் ஓடையில் குப்பை கொட்டுவதை தடுக்க வி.கே.புரம் நகராட்சி புது முயற்சி.

நெல்லை அக், 11 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வி.கே.புரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன, வி.கே.புரம் நகராட்சி பகுதி வழியாக தாமிரபரணி ஆறும், கால்வாய்களும் செல்கின்றன. மேலும் நகராட்சிக்குட்பட்ட மைய பகுதியில் கழிவு நீரோடைகளும் உள்ளன. இந்த நீரோடைகளில் ஆங்காங்கே…

பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் மரணம். முதலமைச்சர் இரங்கல்.

சென்னை அக், 11 பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம், வயது முதிர்வு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93. நெல்லை மாவட்டம் சத்திர புதுக்குளத்தை சேர்ந்த சுப்பு ஆறுமுகம், சுதந்திர போராட்ட காலத்தில் தனது வில்லுப்பாட்டின் மூலமாக…

108 ஆம்புலன்ஸ் சேவை தரவரிசை.

திருவள்ளூர் அக், 11 திருவள்ளூர் ஆம்புலன்ஸ் சேவை தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாவட்டங்கள் வாரியாக தரவரிசை பட்டியலை 108 தலைமை அலுவலகம் வெளியிட்டது. இந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் 2-ம் இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து…

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை அக், 11 திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 100 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திருவண்ணாமலையில் கலைஞர் கருணாநிதி…

போதை பொருள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு.

வேலூர் அக், 11 வேலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர்…

தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் அக், 11 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் நாராயணன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர்…

வேலையின்மையை போக்க விருதுநகர் மாவட்டத்தில் தொழில் தொடங்க கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வலியுறுத்தல்.

விருதுநகர் அக், 11 வேலையின்மையை போக்க விருதுநகர் மாவட்டத்தில் தொழில் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார். நடைபயணம் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நடைபயணத்தை நிறைவு செய்து வைத்த இந்திய கம்யூனிஸ்டு…

கீழக்கரை மின் தடை குறித்த அறிவிப்பு.

கீழக்கரை அக், 11 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை மறுநாள் புதன் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என…

அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் நேற்று காலையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

மதுரை அக், 10 அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் நேற்று காலையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் பெரிய மாடுகள் 9 ஜோடிகளும், தொடர்ந்து சின்ன மாடுகள் தலா 11 ஜோடிகள் வீதம் 2 பிரிவாக விறுவிறுப்பாக நடந்தது. பின்னர்…

கருப்பு பட்டை அணிந்து பணிக்கு சென்ற காகித ஆலை தொழிலாளர்கள்.

கரூர் அக், 10 புகழூர் காகித ஆலையில் கடந்த காலங்களில் ஜீரோ ஸ்டாக் என்ற உயர்ந்த நிலையை அடைந்தபோது வழங்கப்பட்ட வெகுமதியில் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் வழங்கப்பட்டது. இந்தநிலையில் நிலையில் 2021-22-ம் ஆண்டு வழங்குகின்ற…