திருவண்ணாமலை அக், 11
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 100 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திருவண்ணாமலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத்தலைவர் அனந்தராமன் தலைமை தாங்கினார். கிளை பொருளாளர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார்.