Author: Mansoor_vbns

ஆவின் பால் விநியோகம் நிறுத்தம். மக்கள் அவதி.

வேலூர்‌ செப், 1 வேலூரில் சத்துவாச்சாரியில் உள்ள பண்ணையிலிருந்து ஆவின் பால் பாக்கெட்டுகள் வெளியேறததால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதிகாலை 5 மணிக்கே வெளியேற வேண்டிய பால் பாக்கெட்டுகள் வெளியேறாததால் மக்கள் அவதி அடைந்தனர். இதனால் மாநகருக்கு…

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட சிலம்பம் போட்டி.

தர்மபுரி செப், 1 தர்மபுரி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடைபெற்ற இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

கடலூர் செப், 1 சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்ய இந்து அறநிலையத்துறை முடிவு எடுத்தபோது, கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து பொதுமக்களிடம் கேட்ட கருத்துகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்கக்கோரி தீட்சிதர்களுக்கு…

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

திருவாரூர் செப், 1 தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது கனமழையின் காரணமாக இன்று திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேகுவேராவின் மகன் கமிலோ சேகுவேரா மரணம்.

வெனிசுலா செப், 1 கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டவர் சேகுவேரா. புரட்சியாளர், டாக்டர், அரசியல்வாதி இலக்கியவாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட சேகுவேராவுக்கு மொத்தம் 4 மகன்கள். அவர்களில் 3வது மகன் கமிலோ சேகுவேரா. 60…

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா.

ஈரோடு செப், 1 ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 748 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 31 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1…

ஒட்டன்சத்திரத்தில் கட்டப்படும் குளிர்பதன கிடங்கை அமைச்சர்கள் ஆய்வு.

திண்டுக்கல் செப், 1 குளிர்பதன கிடங்கு ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்க…

மதுரை மண்டல அளவிலான நீர்வளத்துறை ஆய்வு கூட்டம். அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு.

நெல்லை செப், 1 தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் நாளை முதல் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை வருகிறார்.பாளை…

பிரதமர் மோடி இன்று கேரளா வருகை. காவல்துறை பலத்த பாதுகாப்பு.

திருவனந்தபுரம் செப், 1 பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று வருகிறார். இதற்காக இன்று மாலை 4 மணிக்கு கொச்சிக்கு விமானம் மூலம் வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட…

பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு வெள்ளை மாளிகை இரங்கல்.

வாஷிங்டன் செப், 1 பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு…