வேலூர் செப், 1
வேலூரில் சத்துவாச்சாரியில் உள்ள பண்ணையிலிருந்து ஆவின் பால் பாக்கெட்டுகள் வெளியேறததால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதிகாலை 5 மணிக்கே வெளியேற வேண்டிய பால் பாக்கெட்டுகள் வெளியேறாததால் மக்கள் அவதி அடைந்தனர்.
இதனால் மாநகருக்கு சொந்தமான முகவர்கள் தங்கள் சொந்த வாகனங்களை எடுத்து வந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து சென்றனர். ஒப்பந்ததாரர்கள் குளறுபடி மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.