Author: Mansoor_vbns

வனத்துறை குடியிருப்பை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

தேனி செப், 19 கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்குட்பட்ட நாராயணத்தேவன்பட்டியில் வன ஊழியர்களுக்கு கடந்த 50 வருடங்களுக்கு முன்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இந்த கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைந்தது. இதனால் அதன் அருகிலேயே புதிதாக குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதில் வன ஊழியர்கள் குடியிருந்து…

புரட்டாசி மாதம் தொடங்கியதையொட்டி வெறிச்சோடிய மீன் மார்க்கெட்.

தஞ்சாவூர் செப், 19 புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலர் விரதம் இருந்து பெருமாள் கோவில்களுக்கு செல்வது வழக்கம். இதனால் இந்த ஒரு மாதம் அசைவ உணவுகளை தவிர்த்துவிட்டு, சைவ உணவுகளை மட்டுமே அவர்கள் உண்பார்கள். இதனால் இந்த ஒரு மாதத்தில் அசைவ…

பட்டா மாறுதல் சிறப்பு முகாம்.

சிவகங்கை செப், 19 காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேரூராட்சி வளாகத்தில் ஜி.ஆர். பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஜி.ஆர். பட்டா பிரிவு வட்டாட்சியர் ராஜா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தார். பள்ளத்தூர் பேரூராட்சி…

அன்னவாசல் அருகே பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு.

புதுக்கோட்டை செப், 18 அன்னவாசல் ஒன்றியம் ரெங்கம்மாள்சத்திரம் பகுதியில் இலுப்பூர் வருவாய் அலுவலர் குழந்தைசாமி தலைமையிலான குழுவினர் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 52 சிறுவர்-சிறுமிகள் அருகே உள்ள வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதை…

மாவட்ட மைய அளவிலான தடகள போட்டி 500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

சேலம் செப், 18 பள்ளிக்கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்ட மைய அளவிலான தடகள விளையாட்டு போட்டி மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.…

கடையநல்லூரில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

தென்காசி செப், 18 கடையநல்லூர் ஒன்றியம் நயினாரகரம் ஊராட்சி சமத்துவபுரத்தில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக. சார்பில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அங்கு அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூக நீதிக்கான…

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை தொடக்க விழா.

திருவண்ணாமலை செப், 18 கலசபாக்கம் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயிகள் தங்கள் நிலத்தில் ரசாயனம், கலப்படம், பூச்சி கொல்லி மருந்து இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை…

பயிற்சி முடித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

வேலூர் செப், 18 மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு வட்டாரங்களைச் சேர்ந்த 35 அங்கன்வாடி பணியாளர்களுக்கு துறை சார்ந்த பணி பயிற்சி குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒரு மாதம் அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த…

மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்

விழுப்புரம் செப், 18 மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்டேரிப்பட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி பேசினார். துணை தலைவர் புனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர்…

மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா .

ராமநாதபுரம் செப், 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ளது காஞ்சிரங்குடி. இங்கிருந்து சுமார் 2கி.மீ தொலைவில் உள்ளது மகான் பக்கீரப்பா தர்ஹா உள்ளது. இங்கு வருடந்தோறும் கொடியேற்றப்பட்டு சந்தனக்கூடு விழா நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து சமுதாய மக்களும் இந்து, முஸ்லிம்,…