தென்காசி செப், 18
கடையநல்லூர் ஒன்றியம் நயினாரகரம் ஊராட்சி சமத்துவபுரத்தில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக. சார்பில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அங்கு அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூக நீதிக்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரகுமான், ஒன்றிய செயலாளர் சுரேஷ், நகர செயலாளர்கள் அப்பாஸ், ரஹீம், தென்காசி யூனியன் நகர் மன்ற தலைவர் ஷேக்அப்துல்லா, துணை தலைவர்கள் ஐவேந்திரன் தினேஷ், கனகராஜ் முத்துப்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், நகர் மன்ற உறுப்பினர்கள் முருகன், முகையதீன் கனி, உள்பட கலந்து கொண்டனர்.