சென்னை நவ, 20
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அவர் யார்-யாரை சந்தித்து பேசுவார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆனாலும் மூத்த மத்திய அமைச்சர்கள் சிலரை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.