Spread the love

சென்னை நவ, 21

தமிழ்த் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (91) சென்னையில் இன்று மாலை காலமானார். இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் படங்கள் உட்பட சுமார் 1000 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கதை திரைக்கதை வசனம் எழுதுவதில் வல்லவரான இவர் திருவாரூரை சேர்ந்தவர். ஆரூர் தாசின் கலைத்திறமையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்துள்ளது.

மேலும் ஆயிரம் படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதிய திருவாரூர் ஏசுதாஸ் என்கிற ஆரூர் தாஸ் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாசமலர் உள்ளிட்ட திரைப்பட வசனங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் ஆரூர்தாஸ் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருதை கடந்த ஜூன் மாதம் ஆரூரார் இல்லத்திற்கு நேரடியாக சென்று முதல்வர் வழங்கி இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *