தூத்துக்குடி நவ, 19
உடன்குடியில் தமிழ்நாடு ஓருங்கிணைந்த பள்ளிக் கல்வி மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல், அவர்களை அன்புடன் அரவணைத்து பள்ளியில் சேர்த்தல், அரசின் திட்டங்களை அவர்களுக்கு கிடைப்பது குறித்து விரிவாக பேசினார்.
உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், பள்ளித் தலைமையாசிரியர் லிவிங்ஸ்டன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தி, பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.