தென்காசி நவ, 18
கடையம் யூனியன் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆலோசனைப்படி நடைபெற்றது. அதில் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன் ஷீலா பரமசிவன்,செயலாளராக மந்தியூர் ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம், பொருளாளராக முதலியார் பட்டி ஊராட்சி தலைவர் முகைதீன் பீவி அசன், துணைத் தலைவராக வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவர் சாருகலா ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அடைச்சானி மதியழகன், ஐந்தாங்கட்டளை முப்புடாதி பெரியசாமி, வீரா சமுத்திரம்ஜீனத் பர்வீன் யாஹுப் , தர்மபுர மடம் ஜன்னத் சதாம், மேல ஆம்பூர்குயிலி லட்சுமணன், சிவசலம்மலர் மதிசங்கரபாண்டியன் , நாடானூர் அழகு துரை ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டமைப்பின் தலைவர் கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன் ஷீலா பரமசிவன் நன்றி கூறினார்.