சிவகங்கை நவ, 18
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியம் மாரந்தை ஊராட்சி தளிர்தலை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மழையால் முழுமையாக சேதமடைந்தது.
இதனால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு சிரமம் உள்ளதாகவும், மழை காலம் ஆரம்பித்துவிட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும் பொதுமக்கள் அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்நாதனிடம் கோரிக்கை விடுத்ததன் பேரில் மாரந்தை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்.
மேலும் சேதமடைந்த தளிர்தலை தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.