சென்னை நவ, 17
லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தோனி, சச்சின், யுவன் ஆகியோரை திட்டிய பழைய பேஸ்புக் போஸ்ட்களை கிளறி எடுத்து நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். உடனடியாக தனது பேஸ்புக் பக்கத்தை டி ஆக்டிவேட் செய்த பிரதீப் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். சில பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளதாகவும் சில பதிவுகள் உண்மைதான் என்றாலும் பழைய தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சிப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.