அரியலூர் நவ, 17
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த கலைக்திரவன் மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளராக பணி மாறுதல் பெற்று சென்றார். இதனையடுத்து தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த ராஜா சோமசுந்தரம் ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு காவல் துறையினர்பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.