திருப்பத்தூர் நவ, 16
கந்திலி ஒன்றியம் பள்ளத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் ரூ.9.60 லட்சம் செலவில் சுய உதவி மகளிர் குழுக்களுக்கு பல்நோக்கு மகளிர் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு வழா நிகழ்ச்சி கொட்டாவூர் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராணி சின்னகண்னு தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணை தலைவர் மோகன்குமார் முன்னிலை வகித்தார், மகளிர் சுய உதவி குழு பல்நோக்கு கட்டிடத்திற்கு திருவண்ணாமலை தொகுதி அண்ணாதுரை நல்லதம்பி, பூஜை போட்டு கட்டிட பணிகளை தொடங்கி வைத்து பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், குணசேகரன், மோகன்ராஜ், ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், கூட்டுறவு சங்க தலைவர் தசரதன், குலோத்துங்கன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.