புதுடெல்லி நவ, 16
தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைத்ததற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி டெல்லியை அடுத்த சூரஜ்குந் பகுதியில் நடைபெற்றது. இதில் தீப்பெட்டி உற்பத்தியாளர்களும் கலந்து கொண்டனர்.
விவசாயம் செழிக்காத பூமியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பது தீப்பெட்டி தொழிற்சாலைகள். விரைவில் தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.