திருப்பூர் நவ, 15
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களும் குழந்தைகளுக்கு எதிராக நிகழக்கூடிய அனைத்து தீங்குகள் மற்றும் தீங்கிழைப்பவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராஜ், குழந்தைகள் நல அலுவலர் நித்யா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.