திருப்பூர் நவ, 13
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ராமைய கவுண்டம்பாளையம் பகுதியில் குமரேசன் என்பவர் தேங்காய் எண்ணை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்றிரவு தேங்காய் சூடு ஏற்றி எண்ணை தயாரிக்கும் போது அதிக வெப்பத்தால் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நெருப்பு மளமளவென பற்றி எரியவே உடனடியாக பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தீயில் எந்திரங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமானது.
அவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து அவினாசிபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.