சென்னை நவ, 15
பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ள ‘லவ் டுடே’ படத்திற்கு ரசிகர்களிடையே ஏக போக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக டீன் ஏஜ் ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது இந்நிலையில் படம் வெளியாகி 10 நாளில் 50 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பட குழு உற்சாகமடைந்துள்ளது திரையரங்கிற்கு ரசிகர்கள் வருகை இன்னும் குறையாமல் இருப்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
