தூத்துக்குடி நவ, 13
தே.மு.தி.க. தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பாக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட கழக பொருளாளர் விஜயன், பகுதி செயலாளர்கள் சின்னதுரை, நாராயணமூர்த்தி, தங்க முத்து, வல்லரசுதுரை, ராஜா முகமது, மாவட்ட நிர்வாகிகள் சின்னதுரை, செல்வம், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.