தூத்துக்குடி நவ, 9
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கோயில் என்பது சுற்றுலாத்தளம் அல்ல கோவிலுக்கு வருபவர்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீசர்ட் அணிந்து கொண்டு வருவது குறித்தும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழக கோவில்கள் என்ன சத்திரமா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.