சென்னை நவ, 11
கனமழை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக புதுக்கோட்டை, சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், சிவகங்கை நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், திருப்பத்தூரில் எட்டாம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.